• Jul 26 2025

ராஜா ராணி-2இல் இருந்து விலகியதற்கான காரணத்தை வெளியிட்ட அர்ச்சனா-ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சிகளில் போட்டி போட்டு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.அந்தவகையில் சூப்பர்ஙிட் சீரியல்களை தருவதில் விஜய் டிவியும் ஒன்று.இவ்வாறு இருக்கையில் விறுவிறுப்புக்கட்டத்தை நோக்கி நகருகின்றது ராஜா ராணி -2

ராஜா ராணி 2 சீரியலில் ஏற்கனவே ஹீரோயினாக நடித்து வந்த ஆல்யா மானசா வெளியேறிவிட்ட நிலையில் அவருக்கு பதிலாக ரியா என்ற புது நடிகை கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.அவரை ஆரம்பத்தில் விமர்சித்த ரசிகர்கள் தற்போது படிப்படியாக அவரை ஏற்றுக்கொண்டு விட்டனர்.



இந்நிலையில் தற்போது வில்லியாக நடித்து வந்த அர்ச்சனா ராஜா ராணி 2ல் இருந்து வெளியேறி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு  பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் தற்போது தான் வெளியேறியதற்கான காரணத்தை அர்ச்சனா தெரிவித்து இருக்கிறார்.

"வாழ்க்கை ஆச்சர்யங்கள் நிறைத்தது என எல்லோருக்கும் தெரியும் . என் வாழ்க்கையும் அடுத்தகட்டத்திற்கு செல்கிறது. நான் ராஜா ராணி 2ஐ மிஸ் செய்வேன். அடுத்த ventureல் சந்திப்போம்" என அர்ச்சனா கூறி உள்ளார்.

அர்ச்சனா என்ன காரணம் என தெளிவாக குறிப்பிடாததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதனால் அவர் புது சீரியலில் நடிக்கிறாரா, அல்லது திருமணம் செய்து கொள்ள போகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.




 

Advertisement

Advertisement