• Jul 25 2025

முக்கிய நிகழ்வில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு கிடைத்த கௌரவம், மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

தேவரகொண்டா விஜய் சாய் என அறியப்படும் நடிகர் விஜய் தேவரகொண்ட, ஒரு இந்திய நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்,இவர் முக்கியமாக தெலுங்கு சினிமாவில் நடித்து வருகின்றார்.இவர் பிலிம்பேர் விருது மற்றும் SIIMA விருதை வென்று எடுத்துள்ளார் 


நுவ்விலா என்ற  படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான தேவரகொண்டா, ஏவடே சுப்ரமணியம் மற்றும் பெல்லி சூப்புலு  ஆகிய படங்களுக்காக பாராட்டுகளைப் பெற்றார். மேலும் இவர் அர்ஜுன் ரெட்டியின் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் மேலும் 2018 இல் மகாநதி, டாக்சிவாலா மற்றும் கீதா கோவிந்தம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் மேலும் வெற்றியைப் பெற்றார்.


தேவரகொண்டா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கிங் ஆஃப் தி ஹில் என்டர்டெயின்மென்ட்டையும் வைத்திருக்கிறார், அது மீகு மாத்ரமே செப்தா என்ற திரைப்படம் அதன் முதல் வெளியீடாக இருந்தது.

தற்போது நடைபெற்று வரும் சைமா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நடிகை விஜய் தேவரகொண்டா அழகாக சிவப்பு கம்பளத்தின்  மீது நடந்து வந்த காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.இந்த நிகழ்விற்கு இவர் இந்தோ-வெஸ்டர்ன் உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து எப்போதும் போல் அழகாகத் தெரிந்தார் இது அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.


Advertisement

Advertisement