• Jul 25 2025

குக் வித் கோமாளி சீசன்-4ஆல் அப்செட் ஆன ரசிகர்கள்...அப்பிடி என்ன தான் ஆச்சு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் மிகப்பெரிய ஹிட் ஆன குக் வித் கோமாளி ஷோவில் அடுத்த சீசனுக்காக தான் ரசிகர்கள் எல்லோரும் தீவிரமாக காத்திருந்தனர். 

வழக்கத்தை விட அடுத்த சீசன் தற்போது தாமதமாகவே ஆரம்பமாகப்போகின்றது.

எனினும் தற்போது 4ம் சீசன் ப்ரமோ விஜய் டிவியால் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் தான் இந்த சீசனுக்கும் நடுவர்களாக வந்திருக்கின்றனர்.



ஆனால் கோமாளிகள் விஷயத்தில் தான் விஜய் டிவி பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜிபி முத்து குக் வித் கோமாளிக்கு வந்திருக்கிறார்.

ஆனால் பழைய பிரபல கோமாளிகளான பாலா, சிவாங்கி, புகழ் என யாரும் ப்ரமோவில் இடம்பெறவில்லை. அதனால் தற்போது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள்.

அவர்கள் வருவார்களா இல்லையா என ரசிகர்கள் கமெண்ட்டில்  சோகமாக கேட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement