• Jul 25 2025

பொங்கலுக்கு வெளியாகும் சூர்யா 42 படத்தின் டைட்டில்- அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன்  எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா.இவர் தற்போது சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். 11ம் நூற்றாண்டின் வரலாற்று பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தில் பிளாஷ்பேக்கில் 5 கேரக்டர்களில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, கோவா போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.வரலாற்று பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.தற்போது படத்தின் மூன்றாவது கட்ட சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.


தொடர்ந்து சூர்யா 42 படக்குழுவினர் இலங்கையில் அடுத்தக்கட்ட சூட்டிங்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கையில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 3டியில் உருவாகவுள்ள இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இந்திய அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களாக படத்தின் சூட்டிங்கில் சூர்யா மற்றும் யோகிபாபு இணைந்த காட்சிகள் சென்னை ஈசிஆரில் எடுக்கப்பட்டன. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை தொடர்ந்து அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை பொங்கலையொட்டி படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement