• Sep 09 2025

ஜெயிலர் படத்தை திருவிழா போல கொண்டாடிய ரசிகர்கள்- செம குஷியில் படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் ரஜினிகாந்தின் நடிப்பில் ஜெயிலர் படம் இன்று வெளியாக உள்ளது.இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விஜய் வசந்த், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சனபிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தில் இருந்து வெளியான காவாலா, ஹுக்கும் பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அண்மையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிகள் தமிழகத்தில் ரத்து முதல் காட்சியே காலை 9 மணிக்குத்தான் தொடங்குகிறது. 


ஆனால் மற்ற மாநிலங்களில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சி இருந்ததால் ரசிகர்கள் விடிய விடிய திரையரங்க வாசலில் பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும், பாட்டுப்பாடியும் ஜெயிலர் படத்தை திருவிழாப் போல கொண்டாடினர். பெங்களுரில் உள்ள லட்சுமி திரையரங்கில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 


மேலும், படம் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பெயர் வந்ததும், விசில் அடித்து, கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.ஜெயிலர் படம் வெளியாகும் தியேட்டர் வளாகங்கள் முழுக்க தோரணங்கள், கட் அவுட்டுகள், பேனர்கள் என களைக்கட்டியுள்ளது. தமிழ்நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 900 திரையில் ஜெயிலர் படம் திரையிடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement