• Jul 26 2025

இதற்கு ஒரு முடிவே இல்லையா... கேள்வி கேட்கத் தொடங்கிய ரசிகர்கள்... 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் குழுமத்தின் பதில் என்ன..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சீரியலிற்குப் பேர் போன தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான். இதில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்திற்குமே அதிகளவான ரசிகர்கள் கூட்டம் உண்டு. அவ்வாறான தொடர்களில் ஒன்று தான் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. 

இத்தொடரானது குடும்பங்கள் கொண்டாடும் ஒரு தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் 'நல்லவர்களாக இருக்கலாம், ஆனால் இவ்வளவு நல்லவர்கள் யாரும் இருக்க முடியாது' என்கிற அளவிற்கு எடுத்துக்காட்டாக மூர்த்தி குடும்பம் உள்ளது.


இருப்பினும் இந்தக் குடும்பம் அனுபவிக்கும் கஷ்டங்களோ ஏராளம். அதாவது முதலில் வீடு, அடுத்து கடை என ஆரம்பித்து  இப்போது இன்னொரு கடையும் பிரச்சனையில் சிக்கிவிட்டது. இவ்வாறாக தொடர்ந்து கஷ்டத்தை சந்திக்கும் இவர்கள் இதில் இருந்து எப்படி மீண்டு வருவார்கள் என்பது தெரியவில்லை.


இந்நிலையில் 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடும் இந்த தொடர் எப்போது முடியும் என ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்காக என்றே ஒரு பதிவு வெளியாக ரசிகர்கள் பலரும் அதனை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


இவ்வாறாக ரசிகர்கள் சீரியலை முடிங்கள் என கூறும்போதே அதற்குப் பதிலளிக்கும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு உடனடியாக ஒரு முடிவு எடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement