• Jul 25 2025

பொன்னியின் செல்வன் 2 -வில் விக்ரமின் நடிப்பைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்- ஐஸ்வர்யா ராய்யை சந்திக்கும் அந்த சீன் சான்ஸே இல்லை

stella / 2 years ago

Advertisement

Listen News!

இன்று ரிலீஸான பொன்னியின் செல்வன் 2 ரசிகர்களுக்கு இன்னும் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. முக்கியமாக சீயான் விக்ரமின் நடிப்பை ரசிகர்கள் பயங்கரமாக பாராட்டி வருகின்றனர். இரண்டாம் பாகம் முழுவதும் விக்ரம் - ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் நடிப்பில் சிலிர்க்க வைத்துள்ளதாம்.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அனைவருக்கும் காட்சிகள் சமமாக இருந்தன. முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் வந்தியத்தேவனாகிய கார்த்தியும், அருள்மொழிவர்மனாகிய ஜெயம் ரவியும் கடலுக்குள் மூழ்குவதாக முடிந்தது. அப்போது அவர்களை காப்பாற்ற ஊமை ரணியான ஐஸ்வர்யா ராயும் கடலுக்குள் குதிக்கிறார்.


அதன் தொடர்ச்சியாக தான் தற்போது வெளியான இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில், வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன் இருவரும் இறந்துவிட்டதாக நினைத்து, அதற்கு காரணமான நந்தினி ஐஸ்வர்யா ராய்யை பழிவாங்க நினைக்கிறார் விக்ரம். அப்போது அவருக்கும் பார்த்திபேந்திர பல்லவன் கேரக்டரில் நடித்துள்ள விக்ரம் பிரபுவுக்கும் இடையேயான காட்சி சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.


 அதேபோல், ஐஸ்வர்யா ராய்யை பழி வாங்குவதற்காக கடம்பூர் கோட்டையில் விக்ரம் என்ட்ரியாகும் காட்சி சிலிர்க்க வைத்துள்ளதாம். அதேபோல், தம்பி ஜெயம் ரவி, தங்கை த்ரிஷா ஆகியோரை சந்திக்கும் எமோஷனலான காட்சியிலும் விக்ரம் செமையாக ஸ்கோர் செய்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் விக்ரம் மிரட்டியிருப்பதாக கமெண்ட்ஸ்கள் வந்துகொண்டே இருக்கின்றன.


Advertisement

Advertisement