• Jul 26 2025

'இளைய நிலா பொழிகிறதே' பாடலுடன் தொடர்புடைய பிரபலம் மரணம்.. கவலையில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இளையராஜாவின் நீண்டகால நண்பராகத் திகழ்ந்து வருபவர் மூத்த இசைக் கலைஞர் கிடாரிஸ்ட் சந்திரசேகர். மேலும் இளையராஜாவின் இசைக் குழுவில் ஆரம்ப காலம் முதல் பணியாற்றி வந்தவர்களில் இவரும் முக்கியமானவர். 

அதுமட்டுமல்லாது பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம்பெற்ற 'இளைய நிலா பொழிகிறதே' உட்பட ஏராளமான இளையராஜாவின் பாடல்களுக்கு கிடார் இசையமைத்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருக்கின்றார். அதேபோல் ஏராளமான இசை நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். 


2020-ஆம் ஆண்டில்  சந்திரசேகரின் சகோதரரான புருஷோத்தமன் மறைந்த நிலையில், இன்று கிடாரிஸ்ட் சந்திரசேகரும் காலமானது இசை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நேற்று மாலை இளையராஜா இசையமைத்துள்ள 'விடுதலை' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இளையராஜாவின் இசை நிகழ்ச்சியோடு இந்த விழா நடந்து முடிந்த நிலையில், சந்திரசேகரின்  திடீர் மறைவு இசையுலகில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், கிடாரிஸ்ட் சந்திரசேகர் மறைவிற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், எழுத்தாளர், பாடலாசிரியர் சுகா ஆகியோர் உட்பட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களின் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement