• Jul 25 2025

பாக்கியாவிற்கு உதவ முடிவெடுத்த மாமனார்.. கடும் கோபத்தில் ஈஸ்வரி- இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இத்தொடரின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

 பணத்துக்காக பாக்யா என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கிறார். அப்போது அந்த மாமனார் இப்போவே என் கூட பேங்குக்கு வா என சொல்கிறார். ஈஸ்வரி எல்லாத்தையும் நீங்க பண்ணா அப்புறம் சவால் விட்டதெல்லாம் என்ன ஆகிறது என கடுமையாக சத்தம் போடுகிறார். இதுக்கு அப்புறம் தான் உனக்கு கஷ்டம்னா என்னன்னு தெரியும் கோபியோட அருமை புரியுமென திட்டுகிறார்.

அடுத்ததாக பாக்கியா பணத்துக்காக என்னவெல்லாம் செய்வது என ஆஃபீஸில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்க அப்போது வந்த எழில் ப்ரொடியூசர் கிட்ட கேட்கவா என்று சொல்ல பாக்கியா அதெல்லாம் கேட்க வேண்டாமென கூறுகிறார்.



இன்னொரு பக்கம் ராதிகா வெளியே செல்ல அப்போது கோபி ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கி இருப்பது தெரியவந்து வருத்தப்படுகிறார். பிரச்சனை எல்லாம் சரியாகி அவர் வாழ்க்கை பழையபடி மாறனும். அவருடைய இந்த நிலைமைக்கு காரணம் நானும் தான் என வருத்தப்படுகிறார்.

மேலும்  இந்த பக்கம் செழியன் வீட்டுக்கு வர ஜெனி இனியா ஸ்கூல் பீஸ் கட்ட நீ உதவக் கூடாதா என சொல்ல நான் எதுக்கு உதவனும்? சவால் விட்ட அம்மா தான் செய்யணும் என சொல்ல ஜெனி ஷாக்கடைகிறாள்‌.

இதன் பிறகு வீட்டுக்கு வந்த ராதிகா மும்பைக்கு போகவில்லை இங்கேயே ஒரு ஸ்கூலில் சேர்க்கலாம் என சொல்ல மயூ சந்தோஷப்படுகிறார். அடுத்ததாக கோபியை பார்த்ததாக சொல்ல வீட்டில் உள்ளவர்கள் ஷாக்காகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement