• Jul 25 2025

மகன் செய்த காதல் திருமணம்... மருமகளால் கண்ணீர் வடித்த மாமனார்... 'நீயா நானா' ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுமே பொதுவாக ரசிகர்களை கவர்ந்தவை தான். அதிலும் குறிப்பாக 'நீயா நானா' நிகழ்ச்சிக்கென்று பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. இந்நிகழ்சியானது10 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களை பல விதத்திலும் கவர்ந்து வருகிறது. 


மேலும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளின் கீழ் தொகுப்பாளர் கோபிநாத் பிரமாதமாக நடத்தி வருகிறார். இதில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், பொருளாதாரம் சார் விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப் படுகின்றன. 


இந்நிலையில் இந்த வாரமும் சுவாரஸ்யமான தலைப்பின் கீழ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதாவது மாமனார் மற்றும் மருமகள் என்ற தலைப்பின் கீழ் இந்த விவாதம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

அந்தவகையில் தற்போது வெளியான ப்ரோமோ வீடியோவில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தன்னையே வீட்டிற்கு வந்த தன்னுடைய மருமகள் கண்கலங்கி அழ வைத்ததாக பெரியவர் ஒருவர் கூறியுள்ளார்.


அதாவது மருமகள் கூறுகையில், எங்க வீட்டில் உள்ள எல்லார்ட துணியும் எடுத்து துவைத்து காயப்போட்டு மடித்து வைக்கிறதில் இருந்து எல்லாமே மாமனார் செய்வதாக கூறுகின்றார். மேலும்  என் கணவர் கொடுப்பாரு ஆனால் அதை தட்டு வரைக்கும் கொண்டு வந்து கொடுக்கிறது என் மாமனார் தான் எனக் கூறி கண் கலங்கி அழுகின்றார்.

அதற்கு மாமனார் கூறுகையில், பாத்ரூம் கூட என்னால் அண்டைக்கு போக முடியல, உடனே என் தோளை பிடித்து தூக்கிக் கொண்டு போய் நிக்க வச்சு கூட்டிற்று வந்தது என் மருமகள் தான் எனப் பெருமையுடன் கூறி பதிலுக்கு அவரும் கண்கலங்குகின்றார்.

இதோ அந்த வீடியோ..!

Advertisement

Advertisement