• Jul 26 2025

வரவேண்டாம் என்று சொல்லியும் இலங்கை தமிழனை ரகசியமாக சந்திக்க சென்ற சினிமா பிரபலங்கள்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இலங்கையில் இருந்து புலம்பெயர் நாட்டுக்கு சென்று அங்கே தொழிலதிபராக இருப்பவர் சுபாஷ்கரன்.இந்த நிலையில் கடந்த பல வருடங்களாக இந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக திகழ்ந்து வருகிறார்.

கடைசியாக இவர் தயாரிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம்.இது தவிர அஜித்தை வைத்தும் அடுத்த படத்தை தயாரிக்கிறார். 

இந்த நிலையில் சுபாஷ்கரனின் பிறந்தநாள் நிகழ்வு நேற்றையதினம் லண்டனில் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது.


இந்த பிறந்தநாளுக்காக தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் அங்கே செல்வதற்கு தயாராகி இருந்த நிலையில் சுபாஷ்கரன் பிறந்தநாளை கொண்டாடவில்லையென இந்தியாவில் இருக்கும் லைக்கா தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை பதவியில் இருப்பவர்கள் தெரிவித்து விட்டார்களாம், இதனால் பலர் அங்கு செல்லும் முயற்சியை கைவிட்டு விட்டார்களாம். 

அப்படியிருந்தும் சில தென்னிந்திய பிரபலங்கள் ரகசியமாக அங்கு சென்றிருந்தார்களாம்  என கூறப்படுகிறது.

இதேவேளை சுபாஷ்கரன் வைத்த கடந்த நியூயர் பார்டிக்கும் பல தென்னிந்திய சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement