• Jul 25 2025

நடிகர் மம்மூட்டி வீட்டில் திடீர் உயிரிழப்பு... இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மம்மூட்டி, 3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் என 6 மொழிகளில்400-க்கும் மேற்பட்ட படங்களில் மம்மூட்டி நடித்துள்ளார். இவரைப் போலவே இவரின் மகன் துல்கார் சல்மானும் பிரபல நடிகராக இருந்து வருகின்றார்.


இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மம்மூட்டியின் அம்மா தனது 93ஆவது வயதில் உயிரிழந்தார். இதனையடுத்து தற்போது மம்மூட்டியின் அக்கா அமீனா (70) காலமாகி இருக்கிறார். 


இவ்வாறாக ஒரே வருடத்தில் மம்மூட்டி குடும்பத்தில் 2உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறவுள்ளன. இதனையடுத்து பலரும் இவரின் உயிரிழப்பிற்கு தங்களது இரங்கலினை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement