• Jul 24 2025

கார் பள்ளத்தாக்கில் விழுந்து பிரபல இளம் நடிகை மரணம்.... சோகத்தில் திரையுலகம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகை பொறுத்தவரையில் சமீபகாலமாக பல தொடர் மரணங்கள் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது ஒரு இந்தி நடிகை உயிரிழந்துள்ளார்.


அதாவது 2004 முதல் 2006 வரை ஸ்டார் ஒன் சேனலில் ஒளிபரப்பான ஒரு ஹிட் தொடர் தான் 'சாராபாய் vs சாராபாய்'. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை வைபவி உபாத்யாய். இந்தத் தொடருக்கு பிறகு இவர் பல்வேறு சீரியல்களிலும், பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.


இந்நிலையில் நேற்றைய தினம் (மே 23) அன்று வைபவி தனது வருங்கால கணவருடன் இமாச்சல் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது எதிர்பாராத விதமாக அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்துள்ளது. 


இந்த சம்பவத்தில் நடிகை வைபவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வருங்கால கணவரின் நிலை குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. அந்தவகையில் தற்போது வைபவியின் குடும்பத்தினர் அவரது உடலை மும்பைக்கு கொண்டு சென்று அங்கு அவரது இறுதிச் சடங்குகளை நடத்த இருக்கின்றனர்.

இவரின் மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்களின் வாயிலாக தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement