• Jul 25 2025

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் மரணம்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட ஒருவராகத் திகழ்ந்து வருபவர் சதீஷ் என்று அழைக்கப்படுகின்ற சதீஷ் சந்திர கவுசிக். இவர் 1987-ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படமான 'மிஸ்டர் இந்தியா' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 


இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வந்த அவர் இன்றைய தினம் தனது 67 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் நடிகர் அனுபம் கேரும் தனது இரங்கலினைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மரணமே இந்த உலகத்தின் இறுதி உண்மை என்று எனக்குத் தெரியும்! நீ இல்லாமல் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது சதீஷ்! ஓம் சாந்தி!" என்று கூறியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


அனுபம் கேர் மட்டுமல்லாது மேலும் பல நடிகர்கள், ரசிகர்கள் உட்படப் பலரும் அவரது மறைவுக்கு தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement