• Jul 25 2025

கடைசியா மெட்ராசுக்கு வா ஆத்தானு ஆசையா கூப்பிட்டான்...-கண்ணீர் வடித்த மாரிமுத்துவின் தாயார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் மாரிமுத்து சின்னத்திரை சீரியலில் நடித்து பேமஸ் ஆனாலும் அவர், சினிமாவில் ஏராளாமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அஜித்தின் வாலி படத்தில் தொடங்கி, மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஜெயிலர் வரை எக்கச்சக்கமான படங்களில் நடிகர் மாரிமுத்து குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

இவர் நடித்து முடித்துள்ள படங்களும் வரிசையாக ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. குறிப்பாக சூர்யா - சிறுத்தை கூட்டணியில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்திலும் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


அதேபோல் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் மாரி முத்து சின்ன ரோலில் நடித்திருக்கிறார். இதுதவிர சிறு பட்ஜெட் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.இந்த நநிலையில் இவர் மாரடைப்பால் இன்றைய தினம் திடீரென இறந்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாகவே உள்ளது.

இப்படியான நிலையில் தன்னுடைய மகனின் மறைவு குறித்து மாரிமுத்துவின் தாயார் உருக்கமாகப் பேசியுள்ளார். அாவது மாரிமுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முதல் தன்னுடைய ஊருக்கு வந்து தன்னைப் பார்த்து விட்டு தேவையானது எல்லாம் வாங்கிக் கொடுத்திட்டு ஆயிரம் ரூபா காசையும் கொடுத்து விட்டு தன்னுடைய வீட்டுக்கு வாம்மா என்று கூப்பிட்டாரம் இவர் வரமுடிலப்பா என்று சொல்ல புதுவீட்டுக்கு போனால் வருவியா என்று கேட்டான் என்று உருக்கமாக பேசியுள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர் என் மகன் 4 பெண் குழந்தைகளுக்கு பிறகு பிறந்தவன். அவன் நடிச்ச படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன். அவன் கட்டி வரும் வீடு 2 கோடி பெறுமதி வரும். பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் என்று சொன்னான் இடையிலேயே போய்ட்டான் என அழுது கண்ணீர் வடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement