• Jul 26 2025

ஜோதிகாவைத் தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் சூர்யா- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் தயாராகுகிறது. 3டி விஷுவல் ட்ரீட், 10 மொழிகளில் தயாராகிறது என படம் குறித்து நிறைய சுவாரஸ்ய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இப்படத்தின் தென்னிந்திய டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் அமேசான் பிரைம் வீடியோவுக்கு 80 கோடிக்கு விற்கப்பட்டுள்ள நிலையில், டீசர் வரும் ஜூலையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


இப்படம் ரூ.1000 கோடி வசூல் குவிக்கும் முதல் தமிழ்படமாக இருக்கலாம் என்ற சினிமா விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.கடந்த சில நாட்களாக சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இந்த நிலையில் சூர்யா ஜிம்மில் படத்திற்காக கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


அதைப்பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக உடல் எடையை ஏற்றியுள்ளாரே, செம என கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் உடல் எடையைக் குறையுங்க சேர் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும் இவரைப் போல ஜோதிகாவும் சமீபகாலமாக உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement