• Jul 24 2025

விஜய்யைத் தொடர்ந்து குட்டி ரசிகரின் ஆசையை நிறைவேற்றி வைத்த விஜய் சேதுபதி- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


சினிமா பிரபலங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க ரொம்பவே ஆசைப்படுவது இயல்பான ஒன்று தான். சமீபத்தில் நடிகர் விஜய்யின் தீ தளபதி பாடலை பார்த்து விட்டு அந்த மாமாவை பார்க்க வேண்டும் என அடம்பிடித்த குழந்தையுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்து சர்ப்ரைஸ் கொடுத்தார் . 

இந்நிலையில், தனது சூப்பர் ஃபேன் உடன் நடிகர் விஜய்சேதுபதி நடத்திய க்யூட்டான உரையாடல் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களையும் பிரபலங்களையும் கவர்ந்து வருகிறது.


விஜய்சேதுபதியை காண வேண்டும் என விருப்பம் தெரிவித்த அந்த குட்டி ரசிகரை அழைத்துக் கொண்டு விஜய்சேதுபதி செம க்யூட்டாக பேச, அந்த சிறுவனோ தனது மழலை பேச்சால் விஜய்சேதுபதியை மட்டுமின்றி அந்த வீடியோவை பார்க்கும் அனைவரையும் நெகிழ வைத்து விடுகிறார்.  கட்டடத் தொழிலாளியின் மகன் என சொல்லிக் கொண்டு விஜய்சேதுபதியிடம் பேசும் அந்த குழந்தையிடம் எதுக்கு இங்க வந்தீங்க என விஜய்சேதுபதி ஆர்வமாக கேட்க, "இந்தா உங்களை பார்க்கணும்னு தோணுச்சு.. அதான் வந்தேன்" என வெள்ளந்தியாக பேசும் மழலையின் பேச்சு அனைவரையுமே ரசிக்க வைக்கிறது.


உன் கூட வேற யாரும் இருக்காங்களா என கேட்க, ஆயம்மா இருக்காங்க என சொல்லும் அந்த சிறுவன் எனக்கு 3 வயசு ஆகுது, ஆயம்மாவுக்கு 2 வயசு ஆகுது என பேசி விஜய்சேதுபதியையும் அவருடன் இருப்பவர்களையும் சிரிக்க வைத்து விட்டான். சாக்லேட் பிடிக்குமான்னு கேட்ட விஜய்சேதுபதி அந்த குழந்தைக்கு சாக்லேட் வழங்க டப்பாவில் இருக்கும் சாக்லேட்டுகளை எடுத்து அடுக்கிக் கொண்டு அப்படியே கிளம்புகிறான்.


தம்பி பாய் சொல்லிட்டு போ, முத்தம் கொடுத்துட்டுப் போ என விஜய்சேதுபதி கூப்பிட, அழகாக விஜய்சேதுபதி அருகே வந்து கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு க்யூட்டாக விடை பெறும் அந்த சிறுவனின் வீடியோவை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் விஜய்சேதுபதி. இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement