• Jul 25 2025

ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப் போயுள்ள ரீமா சென்.. இவருக்கா இப்படி ஒரு நிலமை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு நாயகியாகத் திகழ்ந்து வந்தவர் நடிகை ரீமா சென். அதாவது "வசீகரா என் நெஞ்சினிக்க..உன் பொன்மடியில் தூங்கினால் போதும்.." என்ற பாடலுக்கு பூனை நடைபோட்டு க்யூட்டாக ஆட்டம் போட்டு அந்த ஒரு பாடலின் மூலம் ஒட்டுமொத்த இளசுகளின் இதயத்திலும் இடம்பிடித்து விட்டார். 


அதிலும் குறிப்பாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'மின்னலே' படத்தையும், அதில் மாதவன் மற்றும் ரீமா சென்னின் ரொமான்ஸையும் என்னைக்கும் நம்மால் மறக்கவே முடியாது. இப்படத்தின் உடைய வெற்றிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, கன்னடம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகை என்று கூறுமளவிற்கு உயர்ந்தார்.


இவ்வாறு சினிமாவில் ரொம்பவே பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ரீமாசென் 2012-இல் தொழிலதிபர் ஷிவ் கரன் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்த பின் தன்னுடைய நடிப்பிற்கு முழுக்கு போட்டார். 


இவர்களின் சிறந்த நல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக தற்போது ரீமா சென்னுக்கு ருத்ரவீர் என்ற மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களிலும் சரி, நிகழ்ச்சிகளிலும் சரி ரீமா சென் தலை காட்டாமலே குடும்பம் குட்டி என தன்னுடைய குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார்.


மேலும் சிலகாலமாக சோஷியல் மீடியா பக்கமே வராமல் இருந்த ரீமா சென் தற்போது தான் ஒரு சில புகைப்படங்களை அதில் பகிர்ந்துள்ளார். அதாவது தனது நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட போட்டோவையே அவர் ஷேர் செய்துள்ளார். 


அந்தப் போட்டோவில் நடிகை ரீமா சென் ஆள்அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் எடை அதிகரித்து இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் "நம்ம ரீமா சென்னா இது, இப்படி மாறிட்டாங்களே, ஒல்லிக் குச்சியாக இருந்த உங்களுக்கா இந்த நிலை" எனக் கேட்டு  வருகின்றனர்.


Advertisement

Advertisement