• Jul 25 2025

கடவுளுக்காக தியேட்டர்களில் சீட் ஒதுக்கும் 'ஆதிபுருஷ்' படக்குழு... இந்திய வரலாற்றில் முதன் முறையாக இடம்பெறவுள்ள சம்பவம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக மாறியுள்ள பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள வரலாற்றுக் கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தை ஓம் ராவத் என்பவர் இயக்கி உள்ளார். 

மேலும் இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சீதா கதபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சனோன் நடித்து இருக்கிறார். அத்தோடு இராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்துள்ளார்.


பிரமாண்டமாக தயாராகியுள்ள இப்படமானது தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் மாதம் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விட போவதாக பட தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளது. 


அந்தவகையில் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், "அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமாக விளங்கும் அனுமனுக்கு மிகுந்த மரியாதையுடன் கூடிய பணிவான அஞ்சலி. 'ஆதிபுருஷ்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு இருக்கையை ஒதுக்குகிறோம்" என்று பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய திரைப்பட வரலாற்றில் கடவுளுக்காக தியேட்டரில் சீட் ஒதுக்கியது இதுவே முதல் முறை ஆகும்.

Advertisement

Advertisement