• Jul 25 2025

பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்காக முதன்முறையாக மறைந்த நடிகை சித்ரா எடுத்த போட்டோ சூட்.!- முக்கிய பிரபலம் வெளியிட்ட போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2012ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் சித்ரா. இவர் இதனைத் தொடர்ந்து  ஜெயா டிவி, வேந்தர், சன், ஷு தமிழ், கலர்ஸ் என பல்வேறு தொலைக்காட்சிகளிலும் பணிபுரிய ஆரம்பித்தார்.

இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலமே  மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். ஆனால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக இவர் மறைந்து விட்டார்.


அதன் பிறகு முல்லை கதாபாத்திரத்தில் வேறொரு நடிகை நடித்த வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் இயக்குநர் முல்லை கதாபாத்திரத்திற்காக முதன்முறையாக சித்ரா எடுத்த போட்டோ சூட்டை தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது.

இன்று முல்லை பிறந்தநாள் ஆம் நான் இயக்கிய பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தின் பிறந்தநாள் ஒரு கதையில் வரும் கதாபாத்திரத்தில் பிறந்த நாளை இவ்வளவு சிறப்பாக கொண்டாடுவது திரையுலகில் புதுமை.

கதையில் முல்லையாக வாழ்ந்து சிறப்பாக உருவம் கொடுத்த சித்துவுக்கு பெருமை.!  ரசிகர்களின் ரசனை மிகவும் அருமை.! எனது தொடருக்காக சித்திராவை முல்லையாக மாற்றிய தருணம் 2018 ஜூன் மாதத்தில் ஒரு நாள் அன்றைய தினம் முல்லைக்கு திருமணத்திற்கு முன்பு திருமணத்திற்கு பின்பு என இரு விதமாக ஒப்பனை செய்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை முல்லை நினைவுகளோடு தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் சித்து எனக்கு அறிமுகமானதும் அன்றைய தினமே இந்நாளில் உங்களோடு சேர்ந்து நானும் வாழ்கிறேன் முல்லைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement