• Jul 24 2025

நன்றி மறப்பது தான் சினிமா டிசைன்- மறைந்த இயக்குநர் கே.வி ஆனந்த் மகள் திருமணத்திற்கு போக மறுத்த சூர்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!

முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தான் கே.வி. ஆனந்த். இதனைத் தொடர்ந்து கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார்.அதன் பின்னர் சூர்யா, தமன்னாவை வைத்து அவர் இயக்கிய அயன் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.


 தொடர்ந்து கோ, மாற்றான், அனேகன், கவண் மற்றும் காப்பான் என வித்தியாசமான கதைகளில் பிரம்மாண்ட படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.


இந்நிலையில், நேற்று சென்னையில் மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் மகள் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அந்த திருமணத்தில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்ட புகைப்படம் வெளியான நிலையில், நடிகர் சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்கள் செல்லவில்லையா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.


கோ படத்தில் நடித்த நடிகர் ஜீவாவும் திருமணத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், குறிப்பாக 3 படங்களில் ஹீரோவாக நடித்த சூர்யா ஏன் வரவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது.தமிழ் சினிமாவில் புகழ்மிக்கவர்கள் உயிரோடு இருக்கும் வரைதான் அவர்களுக்குன்டான மரியாதை நட்பு அன்பு எல்லாம் கிடைக்கும்.. அந்த புகழ்மிக்கவர்கள் இறந்தவுடன் ஒரு சில நன்றியுள்ளவர்களை தவிர அனைவரும் அவர்களை மறந்துவிடுவார்கள். இதுதான் சினிமா டிசைன் என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement