• Jul 24 2025

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி போட்ட முதல் உருக்கமான பதிவு- கவலையில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கின்றது. எந்த டாஸ்க் கொடுத்தாலும் போட்டியாளர்கள் முட்டி மோதி விளையாடி வருகின்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் இறுதியாக ஜனனி வெளியேறியிருந்தார். இவரது வெளியேற்றம் ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


 இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனனி பகிர்ந்துள்ள பதிவு, அதிகம் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஜனனி, "பிக்பாஸ் வீட்டில் நான் இருந்த போது என்னை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்களின் வாக்குகளால் என்னை அதிக அளவு ஊக்கப்படுத்தி உள்ளீர்கள்.


 உங்களது எதிர்பார்ப்புகளை இத்தனை நாட்களில் என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் உங்கள் அனைவரையும் என்னால் முடிந்த எல்லா வழிகளிலும் மகிழ்விப்பேன். மிக்க நன்றி" என ஜனனி குறிப்பிட்டுள்ளார்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஜனனியின் பதிவு, தற்போது பார்வையாளர்கள் கவனத்தை அதிகம் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement