• Jul 25 2025

டிக்கெட் வாங்கிய பிறகும் அவமதிக்கப்பட்ட நரிக்குறவர் குடும்பம்- பதறி அடித்து விளக்கம் கொடுத்த ரோகினி தியேட்டர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சென்னையில் ரசிகர்கள் கொண்டாடும் பல திரையரங்குகள் இருக்கிறது. மேலும்  அதில் ஒன்று தான் ரோஹினி திரையரங்கம், முக்கியமாக அஜித், விஜய் படங்கள் ரிலீஸ் என்றால் இதில் கொண்டாட்டம் கோலாகலமாக இருக்கும்.

இரவு முழுவதும் வெடி வெடித்து, பாட்டுகள் போடப்பட்டு செம கொண்டாட்டமாக இருக்கும்.இவ்வாறுஇருக்கையில் இன்று தமிழகத்தில் சிம்புவின் பத்து தல திரைப்படம் வெளியாகியுள்ளது, ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக படத்தை கண்டு வருகிறார்கள்.

இன்று காலை திரையரங்கிற்கு படத்தை பார்க்க ஒரு குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் டிக்கெட் வாங்கிய பின்னர்  திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்கப்படவில்லை, எனவே அவர்கள் குறித்த வீடியோ வெளியாக மக்கள் அனைவரும் கோபப்பட்டார்கள்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கூட தனது ட்விட்டரில் “அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள்  அனைவருக்கும் சொந்தமானது...” என கமெண்ட் செய்துள்ளார்கள்.


வீடியோ வைரலாக தற்போது அவர்கள் திரையரங்கில் அனுமதிக்கப்பட்டு படம் பார்த்துள்ளனர், அந்த வீடியோவை திரையரங்க உரிமையாளர் பதிவு செய்துள்ளார்.


Advertisement

Advertisement