• Jul 24 2025

சிறையில் இருந்து பிரபல நடிகைக்கு உருகி உருகி கடிதம் எழுதிய மோசடி மன்னன் சுகேஷ்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிறந்தநாளையொட்டி நடிகை பெர்னான்டசுக்கு உருகி உருகி காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் காதலிக்கு சுகேஷ் சந்திரசேகர்.

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு வழக்குகள் தொடர்பாக டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வாறுஇருக்கையில்  சமீபத்தில் அவர் தனது பிறந்தநாளையொட்டி, இந்தி நடிகையும், தனது காதலியுமான ஜாக்குலின் பெர்னான்டசுக்கு உருகி உருகி கடிதம் எழுதியுள்ளார்.

'என்னோட பொம்மா (அழகுப் பொம்மையே), நான் எனது பிறந்தநாள் வேளையில் உன்னை ரொம்பவே 'மிஸ்' செய்கிறேன். என்னைச் சுற்றி உனது சக்தி இல்லாது தவிக்கிறேன். அதை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.

 ஆனால் என் மீதான உன் அன்பு எப்போதும் முடிவடையாது, என் மீது முழுமையாக உள்ளது என்பதை நானறிவேன். உன் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும். எனினும் அதற்கு எந்தச் சான்றும் தேவையில்லை. உன் அன்புதான் எனக்கு முக்கியம் பேபி.


நான் உன்னை 'மிஸ்' செய்வதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும். என் 'பொட்ட பொம்மா' (கொழுகொழு பொம்மையே)... நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நீ அறிவாய். நீயும், உனது அன்பும் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பரிசுகள். என் வாழ்வில் அவை விலைமதிப்பற்றவை. எது நடந்தாலும் உனக்காக நான் இருப்பேன் என்பதை நீ அறிவாய். என் பேபியே... உன்னை முழுமையாக  நேசிக்கிறேன். 

உன் இதயத்தை எனக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி. எனது பிறந்தநாளில் வாழ்த்திய என்னுடைய அனைத்து ஆதரவாளர்கள், நண்பர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கின்றேன். நான் நூற்றுக்கணக்கான கடிதங்கள், வாழ்த்துகளைப் பெற்றேன். மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நன்றி.'

இப்படி சிறையில் இருந்துகொண்டும் தனது காதலை உருகி உருகி   கடிதம் எழுதியிருக்கிறார் சுகேஷ் சந்திரசேகர்.அத்தோடு இந்த விடயம் ரசிகர்கள் மத்தியல் தீயாய் பரவி வருகின்றது.இதனை அறிந்த ரசிகர்கள் மோசடி செய்து சிறையில் இருந்தும் இவரின் காதலுக்கு அளவே இல்லை எனக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement