• Jul 24 2025

விஜய், அஜித் முதல் தனுஷ் வரை... பிரபலங்கள் வசிக்கும் ஆடம்பர வீட்டின் விலை மதிப்பு இத்தனை கோடிகளா? வாயடைத்து போன ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய், அஜித், தனுஷ், அல்லு அர்ஜுன், ராம்சரண், பிரபாஸ் போன்ற தென்னிந்திய நடிகர்கள் வசிக்கும் ஆடம்பர வீட்டின் விலை மதிப்பை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், தனுஷ், ரஜினிகாந்த், அல்லு அர்ஜுன், ராம்சரண், பிரபாஸ் ஆகியோர் வசித்து வரும் ஆடம்பர வீட்டின் மதிப்பு என்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

விஜய்

நடிகர் விஜய்க்கு நீலாங்கரையில் வீடு உள்ளது. கடற்கரை ஓரம் அமைந்துள்ள இந்த ஆடம்பர பங்களாவை ரூ.35 கோடி செலவில் கட்டி உள்ளார் விஜய். இந்த வீட்டில் தான் தற்போது தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நடிகர் விஜய்க்கு சொந்தமான மற்றொரு வீடு சாலிகிராமத்தில் உள்ளது. அங்கு விஜய்யின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.

அஜித்

நடிகர் அஜித்துக்கு சொந்தமான வீடு சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது. அந்த வீட்டின் மதிப்பு ரூ.15 கோடி இருக்குமாம். அங்கு தன் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார் . 

தனுஷ்

நடிகர் தனுஷ் தான் விலையுயர்ந்த பங்களாவை கட்டி உள்ளார். இவர் அண்மையில் போயஸ் கார்டனில் கட்டியுள்ள ஆடம்பர பங்களாவின் மதிப்பு ரூ.150 கோடியாம். 4 அடுக்கு கொண்ட இந்த வீட்டில் சகல வசதியும் உள்ளதாம். மனைவி ஐஸ்வர்யா பிரிந்து சென்றுவிட்டதால் தற்போது தனது பெற்றோருடன் மட்டும் அந்த வீட்டில் வசித்து வருகிறார் .

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். இவருக்கு சென்னையில் உள்ள போயஸ் கார்டன் பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு ரூ.35 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ரஜினி தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யா உடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.

Advertisement

Advertisement