• Jul 26 2025

நீக்கப்பட்ட காட்சிகளுடன் வெளியானது.. பொன்னியின் செல்வன் 'அலைகடல்' பாடலின் முழு வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சாதனை ஆக உருவாகி உள்ள ஒரு படமே 'பொன்னியின் செல்வன்'. அதுமட்டுமல்லாது மணிரத்னம் அவர்களின் பல நாள் கனவும் இப்படத்தின் வாயிலாக நிறைவேறி உள்ளது.

இந்த படத்திற்காக பல வருடங்களாக பலரும் முயற்சி செய்திருந்தார்கள். ஆனால் அவர்கள் யாராலும் முடியாத ஒன்றை இந்த வருடத்தில் ரிலீஸ் செய்து சாதனை படைத்து விட்டார் மணிரத்னம்.


அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் அவர்களின் காலத்தில் இருந்தே இந்த நாவலை படமாக எடுக்க முயற்சி எடுத்திருக்கிறார்கள். ஆனால் மணிரத்னத்தினால் மட்டுமே அது சாத்தியம் ஆகியுள்ளது.

மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், ஜெயராம் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளார்கள். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள். 


மேலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் படத்தினுடைய நீளம் கருதி நீக்கப்பட்டன. 

அந்தவகையில் தற்போது அலைகடல் பாடல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதாவது முன்னர் கூறியது போல் படத்தின் நீளத்தை கருத்தில் கொண்டு இப்பாடலின் சில காட்சிகளை நீக்கி படத்தில் பாதி மட்டுமே இடம்பெற்று இருந்தது.


இந்நிலையில் தற்போது நீக்கப்பட்ட காட்சிகளுடன் கூடிய அலைகடல் பாடலின் முழு வீடியோவையும் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளது.

மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இப்பாடலை அந்தாரா நந்தி பாடி இருந்தார். இப்பாடல் வரிகளை சிவா ஆனந்த் பிரமாண்டமாக எழுதி இருந்தமை குறிப்பிடத்தக்கத்து. ரவி வர்மணின் பிரம்மிப்பூட்டும் காட்சியமைப்பில் உருவாகி உள்ள இப்பாடலின் உடைய வீடியோ ஆனது தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement