• Jul 26 2025

சன்னி லியோனுக்கு பால் கோவா ஊட்டி விட்ட ஜி.பி.முத்து-மேடைக்கு ஓடி வந்து நடிகர் சதீஷ் செய்த வேலை-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாகவும் கவர்ச்சி நடிகையாகவும்  வலம் வருபவர் தான் சன்னிலியோன். இவர் தமிழில் ஓ மை கோஸ்ட் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஜி.பி முத்து மற்றும் காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் ஜி.பி முத்து பேசிய விடயங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.அதாவது அதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கு இது என்னுடைய முதல் படமாக இருப்பதால் மிகவும் சந்தோஷமாக இருக்கு என்றார்.இந்த படத்தில நடிக்கும் போது சன்னிலியோனும் என்னுடன் நடிக்கிறார் என்று சொன்னாங்க. எனக்கு சன்னி லியோன் என்றால் யாரென்று தெரியாது கமெண்ட் எல்லாம் வரும். ஒரு நாள் ஆனந்த் தம்பி சன்னிலியோனின் போட்டோ காமிச்சாங்க அப்பதான் அவங்களையே தெரியும் என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் இப்படத்தில டாக்டர் கேரக்டரில் நடிச்சிருக்கிறேன்.அந்த டாக்டரின் பெயரைக் கேட்டாலே சிரிப்பாக இருக்கு. இருந்தாலும் அதன் பெயர் என்ன என்று சொல்ல மாட்டேன்.படத்தை பார்த்திட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்க என்றார்.

அதன் பின் தொடர்ந்து பேசிய ஜி.பி.முத்து சன்னிலியோனை பார்த்து சன்னிலியோன் அக்கா  உங்களை பார்த்தது சந்தோசமாக இருக்கின்றது எனக் கூற அக்கா என்று கூப்பிட வேண்டாம் என  தொகுப்பாளர் அர்ச்சனா கூறி ... மனசும் உடையுது என சொல்கிறார்.அதற்கு அப்ப எப்பிடி கூப்பிடுறது என ஜி.பி.முத்து கேட்க  மானே தேனே என எப்பிடி வேண்டுமானாலும் கூப்பிடுங்க எனக் கூறுகின்றார்.


பின் பேசிய ஜிஇபி.முத்து சன்னிலியோன் அக்கா உங்கட போட்டோவை பார்த்து நான் பால்க்கோவா குடுத்தேன்.ஏன் என்றால் தமிழ் நாட்டில் அது பெரிய விசயம் எனக் கூற எல்லோரும் கை தட்டுகின்றனர்.எனக்காக செய்யல என்னுடைய ரசிகர்களுக்காக செய்கின்றனர் எனக் கூறி சன்னிலியோனுக்கு பால்க்கோவா ஊட்டி விடுகின்றார்.அதற்கு சன்னிலியேனும் ஊட்டி விடுகின்றார்.


இவர்கள் இருவரும் செய்த செயலைப் பார்த்த சதீஸ் மேடைக்கு ஓடி வந்து தானும் சாப்பிட்டுவிட்டு அண்ணை நீங்க இதைச் செய்ய எல்லோரும் கை தட்டுகின்றார்கள்.ஆனால் எல்லோருடைய நினைப்பும் உங்களை பார்த்து நக்கு என்று தான் சொல்லுவார்கள் எனக் கூறி சிரிக்கின்றார்.இவ்வாறாக இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement