• Sep 11 2025

சித்தார்த் திருமணத்தில் குழந்தையாக நிற்கும் கேப்ரியல்லா- இதுவரை யாரும் பார்த்திடாத அரிதான போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு வித்தியாசமான கதைகளத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2. சந்தர்ப்ப சூழ்நிலையில் திருமணம் செய்து கொண்ட அக்கா தங்கை மற்றும் அண்ணன் தம்பியின் வாழ்க்கை பற்றி இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இந்த சீரியலில் சண்டை, சண்டை என கடந்த சில வாரங்களாக தொடரில் சோகமான கதைக்களமே ஓடிக் கொண்டிருக்கிறது,அத்தோடு எப்போது ஜீவா, ப்ரியா ஜோடியும் பார்த்திபன், காவியா ஜோடியும் சேர்ந்து வாழ்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


இந்த சீரியலில் பார்த்தி என்ற காரெக்டரில் நடிகர் சித்தார்த் நடித்து வருகின்றார். சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக  வைத்துள்ளார்.


தற்போது இவரின் திருமண வரவேற்பின் போது நடன இயக்குநர் சாண்டி மற்றும் இப்போது காவ்யாவாக ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடிக்கும் கேப்ரியல்லா வந்துள்ளார்கள்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக இருவரும் எப்படி இருக்கிறார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement