• Jul 25 2025

பசுபதி மாமாவின் துரோகத்தை அறிந்த கங்காவும் சகோதரிகளும் - காவேரி போட்ட சவால்- பரபரப்பான திருப்பங்களுடன் மகாநதி சீரியல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியல் தகப்பனை இழந்த 4 பெண் பிள்ளைகள் தம்முடைய வாழ்க்கையில் முன்னேற என்னவெல்லாம் செய்யப் போகின்றார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

அதன்படி இந்த சீரியலில் காவியா கொடுத்த ஐடியாவால் வீட்டில் ஹோம்ஸ்ரே நடத்தி வருகின்றனர். எப்படியாவது முன்னேற வேண்டும் என துடித்து வருகின்றனர்..


இப்படியான நிலையில் தனது நண்பனான சந்தானத்தின் குடும்பம் முன்னேறக் கூடாது என்பதில் பசுபதி என்பவர் முனைப்பாக இருந்த வருகின்றார். இப்படியான நிலையில் சந்தானம் இறந்ததைத் தொடர்ந்து அவரின் பொருட்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கின்றது. அதில் சந்தானம் பசுபதியிடம் கொடுத்த பணத்தின் கணக்கை எல்லாம் எழுதி வைத்திருக்கின்றார்.


இதனைப் பார்த்த காவேரி பசுபதியின் உண்மை முகத்தை அறிந்ததோடு அவருடைய வீட்டிற்கே சென்று சவால் விட்டுள்ளார். உங்களைப் பற்றிய உண்மைகளை கட்டாயம் வெளியில் கொண்டு வருவேன் உன்றும் கூறியுள்ளார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement