• Jul 24 2025

தன்னுடைய பாட்டைக் கிண்டலடித்ததால்... கோபத்தில் அரங்கை விட்டுப் போக முடிவெடுத்த கங்கை அமரன்... 'சூப்பர் சிங்கர்-9' ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இதனை பிரியங்கா மற்றும் மகாபா தொகுத்து வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது பெரியவர்களுக்கான 9வது சீசன் வெற்றிகரமாக நடந்து வருகிறது, இறுதிக்கட்டத்தையும் எட்டிவிட்டது. இதில் ஒவ்வொரு வாரமும் பிரபல இசையமைப்பாளர்கள் வந்து நிகழ்ச்சியை சிறப்பிக்கிறார்கள். 


அந்தவகையில் இந்த வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர், மற்றும் பாடகரான கங்கை அமரன் வருகை தந்துள்ளார். இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


இதனை மகாபா மற்றும் குரேஷி தொகுத்து வழங்கியுள்ளனர். அதில் அருணா அரங்கிற்கு ஏறும் போது மியூசிக் ஒன்று ஒலிக்கின்றது. இதற்கு மகாபா "அது என்ன உனக்கு மட்டும் சீரியலில் வருகிற மியூசிக் போடுறாங்க" எனக் கூறி நக்கல் அடிக்கின்றார்.

அதற்கு கங்கை அமரன் "நான் ஏதோ கஷ்ட்டப்பட்டு ஒரு பாட்டு போட்டால் அந்த மாதிரி BGM போடுறாங்க" எனக் கூறுகின்றார். அதற்கு குரேஷி 'உங்க பாட்டா" எனக்கேட்டு வியக்கின்றார். அதுமட்டுமல்லாது "வந்தனம் சைதாப்பேட்டை நந்தனம் என்றுகிட்டு" எனவும் கூறி கிண்டலடிக்கின்றார்.


அதற்கு கங்கை அமரன் "ஏய் நான் போறேன்பா" எனக் கூறி கிளம்ப ஆயத்தமாகின்றார். அதற்கு மகாபா "போகாதீங்க சார் அப்புறம் நானும் போய்டுவேன்" எனக்கூறி கெஞ்சுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.   


Advertisement

Advertisement