• Jul 26 2025

கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனின் திருமணத்திற்கு நாள் குறிச்சாச்சு- எப்போ தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் பிரபலமான நடிகை மஞ்சிமா மோகன், இவர் இதனைத் தொடர்ந்து கதாநாயகியா தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இந்த முதல் படமே இவருக்கு வெற்றிப் படமாக அமைந்ததால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.அதன்படி சத்திரியன்', 'இப்படை வெல்லும்' போன்ற படங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.


தொடர்ந்து நடிகர் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக  'தேவராட்டம்' படத்தில் நடித்திருந்தார்.இந்தப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

இந்த படத்தின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசு வெளியாகி வந்த போதிலும், இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த தகவலை மறுத்து வந்த மஞ்சிமா மோகன், ஒருவழியாக... கடந்த மாதம் இருவரும் ஒரே மாதிரி உடையில் எடுத்து கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டு, காதலை உறுதி செய்தார்.


இதை தொடர்ந்து, தற்பொழுது இந்த மாதம் 28 ஆம் திகதி இவர்களுக்கு திருமணம் நடத்த இரு தரப்பு பெற்றோரும் முடிவு செய்துள்ளதாகவும், இவர்களுடைய திருமணத்தில் இருவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த தகவல் குறித்து கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement