• Jul 23 2025

’மக்கள் கேள்விக்கு பதிலளிக்க தயாராகுங்கள்’ கிச்சா சுதீப்பை விளாசும் பிரகாஷ் ராஜ்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக நடிகர் கிச்சா சுதீப் அறிவித்துள்ளார்.

கர்நாடக திரைப்பட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்து ட்வீட் செய்துள்ளார்.

124 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 24ஆம் தேதி கடைசிநாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் வரும் மே மாதம் 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவை பொறுத்தவரை 2.62 கோடி ஆண் வாக்காளர்கள், 2.59 கோடி பெண் வாக்காளர்கள் என 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 36 தனித்தொகுதிகளும் 15 பழங்குடியினர் தொகுதிகளும் உள்ளது. தமிழ்நாட்டை ஒட்டியுள்ள எல்லைப்பகுதிகளான மாண்டியா, கோலார், பெங்களூரு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

இந்த தேர்தலில் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் கடந்த புதன் அன்று முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய கிச்சா சுதீப், "நான் இங்கு வர வேண்டிய அவசியம் இல்லை, எந்த தளத்திற்காகவும், பணத்திற்காகவும் இங்கு வரவில்லை. ஒரு நபருக்காக மட்டுமே இங்கு வந்துள்ளேன். முதல்வர் மீது எனக்கு அதிக மரியாதை உள்ளது. மாமா (பொம்மை) அதனால்தான் பொம்மை சார்க்கு முழு ஆதரவு தருகிறேன் என்று அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.பாஜகவின் சித்தாந்தத்துடன் உடன்படுகிறீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு, சுதீப், "ஒரு குடிமகனாக, பிரதமர் மோடி எடுத்த சில முடிவுகளை நான் முற்றிலும் மதிக்கிறேன், ஆனால் அது எனது பார்வை. ஆனால் இன்று நான் இங்கே அமர்ந்திருப்பதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றும் அவர் விளக்கம் அளித்தார்.


Advertisement

Advertisement