• Jul 25 2025

''அந்த நடிகையை கலியாணம் செய்து வைங்க''… அடம் பிடித்த சல்மான் கான்.! யாருங்க அவங்க?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஏதேனும் நிகழ்ச்சிக்கு சென்றேலோ அல்லது ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தாலோ அவரிடம்  அதிகம் கேட்கப்படும் கேள்வி, ‘உங்களுக்கு எப்போது திருமணம்?’ என்பது தான். ஏனென்றால்,  57 வயதாகும் அவர் இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதனால் அவரை பலரும் கேலியும் செய்து வருகிறார்கள் என்று கூட கூறலாம்.

இந்த நிலையில், சல்மான் திரையுலகிற்கு வந்த ஆரம்ப நாட்களில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இருந்த பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் சல்மான் கான் ஜூஹியின் மீது எப்படி பிரமிப்பில் இருந்தார் என்பதை பகிர்ந்து கொண்டார்,

ஜூஹி பற்றிய பேசிய சல்மான் கான் ” “அவள் மிகவும் இனிமையான, அபிமான பெண். நான் அவளின் தந்தையிடம் அவளை என்னை திருமணம் செய்து கொள்ள விடுவாயா என்று கேட்டேன். அவர் மறுத்துவிட்டார்.” அவரது தந்தை ஏன் அவரை ஏற்கவில்லை என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை, தபாங் நடிகர் மேலும் கூறினார்.

“ஒருவேளை நான் ஜூஹிக்கு  நான் பொருத்தமானவர் இல்லை என்று நினைக்கிறேன்… அவருக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை” என தெரிவித்துள்ளார். ஜூஹி சாவ்லா ஜெய் மேத்தாவை டிசம்பர் 1995 இல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement