• Jul 24 2025

கல்யாணம் பண்ணிக்கிறது எல்லாம் முட்டாள் தனம் அதை ஏன் பண்ணனும்- இனியா சீரியல் ரிஷியின் சுவாரஸியமான பதில்

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன் டிவியில் புதிதாக ஆரம்பித்த சீரியல் தான் இனியா. இதில் கதாநாயகனாக ரிஷியும் கதாநாயகியாக ஆல்யா மானசாவும் நடித்து வருகின்றனர். விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. இந்த நிலையில் ரிஷி பிரபல செனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். 

அதில் அவர் கூறிய விடயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது. நான் என்னுடைய 17 வயது வயதிலேயே  சொல்லிட்டேன். நா் மீடியாவுக்குள்ள தான் போகப் போறேன் என்று. வீட்டில முதலில் சத்தம் போட்டாங்க. நான் சொன்னேன் உங்க கிட்ட கேட்கல நான் போகப் போறேன் என்று அதுமாதிரியே தான் மீடியோவுக்குள்ளே வந்தேன்.


எனக்கு சின்ன வயசில இருந்து நிறைய பொண்ணுங்களோட சர்ப்போட் இருந்திச்சு. எங்க அம்மா தான் சொல்லுவாங்க. எப்பவும் பேசிட்டு மட்டும் இருக்காதீங்க செயலிலும இறங்குங்க என்று. அது மாதிரி தான் எனக்கு சர்ப்போட் பண்ணின எல்லோரும் இருந்தாங்க. நான் பையன்கள் கூட இருந்தால் இவ்வளவு துாரம் வந்திருக்க முடியாது.

நான் பொண்ணாப் பிறந்திருந்தாலும் கல்யாணம் பண்ணிக்காமல் தான் இருந்திருப்பேன். கல்யாணம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட விடயம் அதை எதுக்கு அவ்வளவு கிராண்டா பண்ணிட்டு இருக்கனும். ஒருத்தங்களோட கமிட்டாகி வாழ்வது எல்லாம் முட்டாள்த்தனமான விஷயம். இதெல்லாம் எனக்கு ஒத்து வரல.


மேலும் இவ்வளவு காலம் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் எல்லாம் இல்லை. என்னோட அட்டிரியூட் அதனால தான் நான் நடிக்கல. இடையில சின்ன மனஅழுத்தம். இதனால தான் நானே விலகியிருந்தேன் என்றும் அதில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement