• Sep 12 2025

கெட்டி மேளம் கொட்ட....வெண்ணிலா கழுத்தில் தாலி கட்டிய சூர்யா - வெளியான Kaatrukkenna Veli Promo!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவ்வாறு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த ஒரு ஹிட் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் ஆனது முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த சீரியலின் கதைப்படி தற்போது வெண்ணிலா கல்யாண மண்டபத்திலிருந்து தப்பி ஓடி வந்து விட்டார். இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஷிவானிக்கும் சூர்யாவிற்கும் கல்யாணம் நடைபெறுகின்றது. 


அப்போது சூர்யா வெண்ணிலா கழுத்தில் தாலி கட்டப் போகிறார். அந்த சமயத்தில் ஷாக்கான வெண்ணிலா சூர்யா சேர் நிறுத்துங்க எனக் கத்தியவாறே ஓடி வருவதாக சென்ற வாரம் ஒளிபரப்பாகி இருந்தது.


இந்நிலையில் தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.அதில் ''ஷிவானி,வெண்ணிலாக்கு மாலையை போட்டு மணமேடைக்கு அனுப்பி வைக்கிறார்.

வெண்ணிலா,சந்தோசமாக மனடையில் ஏறி சூர்யாவிற்கு அருகில் அமருகிறார்.அனைவரும் மலர்கள் தூவ சூர்யா சந்தோசமாக வெண்ணிலா கழுத்தில் தாலி கட்டுகிறார். இவ்வாறாக அடுத்தவார ப்ரோமோ அமைந்துள்ளது.




Advertisement

Advertisement