• Jul 25 2025

இரண்டாம் மனைவி பற்றிய சர்ச்சைக்கு கில்லி பட நடிகர் விளக்கம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கில்லி, குருவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தி நேற்று திடீரென இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அத்தோடு அவர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ருபாலி என்ற பெண்ணை கரம்பிடித்தார்.

ஆஷிஷ் அவரது முதல் மனைவியை பிரிந்ததே யாருக்கும் தெரியாத நிலையில் அவரது இரண்டாம் திருமணம் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.

அத்தோடு  இரண்டாம் மனைவி ரூபாலிக்கு 33 வயது தான் ஆகிறது என்றும், 60 வயது நடிகர் இவ்வளவு இளம் வயது பெண்ணை திருமணம் செய்தது சரியா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு ஆஷிஷ் வித்யார்த்தி விளக்கம் கொடுத்து இருக்கிறார். அத்தோடு தான் இரண்டரை வருடங்களுக்கு முன்பே முதல் மனைவியை பிரிந்துவிட்டதாக கூறி இருக்கும் அவர், அதற்கு பிறகு தான் ரூபாலியுடன் பழக தொடங்கியதாக கூறி இருக்கிறார்.

"எனது வயது 60 இல்லை, 57 தான் ஆகிறது. ரூபாலிக்கு 50 வயது ஆகிறது" என ஆஷிஷ் வித்யார்த்தி தெரிவித்து இருக்கிறார். 


Advertisement

Advertisement