• Jul 24 2025

தளபதி 67 படத்தின் அப்டேட் கொடுங்க- விஜய்யிடமே நேரடியாகக் கேட்ட பிரபல இயக்குநர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தற்பொழுது இயகக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் கதாநாயகியாக ராஸ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.இவர்களுடன் குஷ்பு சரத்குமார் பிரபு ஷாம் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றது.

குடும்பப் பாங்கான கதைக்களத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படமானது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.இப்படத்தில் இடம் பெறும் ரஞ்சிதமே என்னும் பாடல் அண்மையில் வெளியாகியிருந்தது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்னும் படத்தில் நடிக்கவுள்ளார்.ஆனால் அப்படம் தற்போது வரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.


இதற்கிடையே பிரபல இயக்குநர் ரத்னகுமார் அவரின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் தளபதி விஜய் தன்னை வாழ்த்தியதாகவும், ஒரு நொடி அவரிடமே தளபதி 67 அப்டேட்டை கேட்க நினைத்தாகவும் பதிவிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement