• Jul 24 2025

''அரை டிக்கெட் மட்டும் கொடுங்க'' .. மாவீரன் படைத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், சரிதா மற்றும் யோகி பாபு நடித்த மாவீரன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், முதல் வாரத்தில் 40 கோடி வரை மாவீரன் உலகளவில் வசூல் ஈட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகமான அரங்கு நிறைந்த திரையரங்குகளுடன் மாவீரன் ஒரு பக்கம் ஓடினாலும், அந்த படத்தின் இரண்டாம் பாதியையும் படத்தின் கதையையும் நெட்டிசன்கள் இன்னொரு பக்கம் பயங்கரமாக ஓட்டி வருகின்றனர்.

இப்போ கையை முறுக்குவான் பாரு: பசங்க படத்தில் வரும் காமெடி காட்சி தான் மாவீரன் படத்தின் கதையே என்றும் விஜய்சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுக்க சிவகார்த்திகேயன் அடிக்கும் காட்சிகளை இப்போ அவன் கையை முறுக்குவான் பாரு, இப்போ ஒரே குத்தா குத்துவான் பாரு என ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி மாவீரன் படத்தை மரண கலாய் கலாய்க்கும் விதமாக படத்தின் முதல் பாதி மட்டுமே நன்றாக இருந்தது, இரண்டாம் பாதி வேஸ்ட் என்கிற ரீதியில் படத்திற்கு அரை டிக்கெட் மட்டும் கொடுங்க, முதல் பாதி பார்த்துட்டு வந்துடுறோம் என வேறலெவல் ட்ரோல் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

டான், பிரின்ஸ் படங்களுக்கு மாவீரன் படம் எவ்வளவோ பரவாயில்லை என்பது உண்மை தான். ஆனால், சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் கம்ப்ளீட்டான ஒரு படம் இல்லை என்றும் அடுத்ததாக கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் சிவகார்த்திகேயனுக்கு இதை விட பெரிய படமாக அமைய வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement