• Jul 25 2025

"கௌதம் கார்த்திக்கிற்கும் அதையே கொடுங்க"... சிம்புவின் நெகிழ்ச்சிச் செயல்.. குவியும் பாராட்டுக்கள்.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சிம்புவின் நடிப்பில் தற்போது 'பத்து தல' படம் உருவாகியுள்ளது. இப்படமானது நாளை திரையில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அதாவது பாடல்கள், ட்ரைலர், சிம்புவின் நடிப்பு என பல விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இப்படத்தினுடைய படப்பிடிப்பானது 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இருப்பினும் இயக்குநர் மாற்றம், கொரோனா ஊரடங்கு, நிதி பிரச்சனை என பல காரணங்களால் இப்படம் பின்னுக்கு தள்ளிப் போனதோடு,  ஒருகட்டத்தில் இப்படம் கைவிடப்போவதாகவும் தகவல்கள் வந்தன. எது எப்படியோ ஒரு வழியாக பத்து தல திரைப்படம் தற்போது முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது. 


மேலும் முதலில் இப்படத்தில் கௌதம் கார்த்திக் தான் நாயகனாக நடித்தார். பின்பு கதையில் பல மாற்றங்களை செய்து இறுதியில் சிம்பு நாயகனாகிவிட்டார். இருப்பினும் கௌதம் கார்திக்கிற்கும் தனக்கு சரி சமமான ரோலை கொடுக்குமாறு சிம்பு கூறியதாக இயக்குநர் கிருஷ்ணா சமீப்பதில் தெரிவித்துள்ளார்.


அதாவது பத்து தல என் படமாக மட்டும் இருக்கக்கூடாது, இது கௌதம் கார்த்திக்கின் படமாகவும் இருக்கவேண்டும் என சிம்பு கிருஷ்ணாவிடம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த விடயமானது படக்குழுவை சார்ந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்ததாம். 


அதுமட்டுமல்லாது இப்படத்தின் மூலம் கௌதம் கார்த்திக்கிற்கு சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் எனவும் சிம்பு கூறியுள்ளார். எந்த ஈகோவும் இல்லாமல் சிம்பு இவ்வாறு பெருந்தன்மையாக நடந்துகொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் சிம்புவின் இந்த செயலிற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement