• Jul 26 2025

ரகசியம் சொன்ன குணசேகரன்... ரேணுகாவை அடிக்கப் பாய்ந்த ஞானம்... ஜனனி எடுத்த அதிரடி முடிவு... பரபரப்பான திருப்பங்களுடன் 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அதில் என்ன நடந்துள்ளது என்பதை பார்ப்போம்.


அதில் குணசேகரன் விசாலாட்சியிடம் "சொத்தை மீட்டுக் கொண்டுவர வேண்டியது உன் மருமகள்களோட கடைமை அம்மா" எனக் கூறுகின்றார். பதிலுக்கு ரேணுகா "ஆம்பள ஆளுங்க தான் இத்தனை ஆளுங்க இருக்கீங்களே களத்தில் இறங்கி ஆடுங்க" என்கிறார்.


இதனைக் கேட்ட ஞானம் என்னடி பேசிட்டு இருக்காய் எனக்கூறி ரேணுகாவை அடிக்கப் பாய்கின்றார்.  உடனே ஜனனி "போதும் நிறுத்துங்க சொத்தை நாங்க வாங்கித் தாறோம்" என்கிறார். 

மறுபுறம் குணசேகரன் ஞானத்திடம் அந்த ஆடிட்டர் சொன்னார் தானே அந்த டாக்குமெண்டெல்லாம்  பொம்பளைங்க பேரில் எழுதியிருக்கோம் எல்லோ" எனக் கூறி ஏதோ ரகசியம் கூறுகின்றார். 


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.

Advertisement

Advertisement