• Jul 26 2025

கனவில் வந்த கடவுள் கூறிய அதிர்ச்சித் தகவல்... ஆபாச நடிகையாக மாறிய அறிவியல் ஆசிரியை.. ஷாக்கான மக்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாகவே சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறி விட்டது. மேலும் இந்தக் கவரியானது எல்லை மீறிப் போகும் சமயத்தில் ரசிகர்களால் மிகவும் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. 

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஆசிரியர் ஒருவர் ஆபாச நடிகையாக மாறி உள்ளமை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. அதாவது லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவர் கர்ட்னி டில்லியா. 35 வயதான இவர்  பிரபல ஆபாச நடிகையாக மாறி தற்போது மக்களால் நன்கு அறியப்படுகிறார். 

இருப்பினும் இவர் உண்மையில் ஒரு முன்னாள் ஆசிரியை என்பது பலருக்கும் தெரியாத ஒரு முக்கிய விஷயம். அந்தவகையில் மாணவர்களுக்கு அறிவியல் பாடம் சொல்லிக் கொடுத்த அவர் இன்று ஆபாச நடிகையாக மாறி உள்ளார். 


இவர் தற்போது மூன்று ஆபாச இணையதளங்களை நடத்தி வருகிறார். அதில் அவருக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர். இப்படியான பெரிய ரசிகர் பட்டாளத்தைப் கொண்டுள்ள அவர் ஒரு மாதத்தில் 40 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை சம்பாதித்து வருகின்றார். இத்தனைக்கும் கர்ட்னி டில்லியா நான்கு குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரின் இந்த தொழிலுக்கு கணவரின் முழு ஒத்துழைப்பும் இருந்து வருகின்றது.

இந்நிலையில் கர்ட்னி டில்லியா தான் எப்படி ஆபாச பட நடிகையாக மாறினேன் என்பது குறித்து சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது "இந்த தொழிலில் அதிகப் புகழும் பணமும் கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஒரு ஆபாச நடிகையாக வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். நான் ஆசிரியையாக இருந்த சமயத்தில் கடவுள் என் கனவில் வந்து என்னை ஆபாச நட்சத்திரமாக மாறச் சொன்னார். 


நானும் கடவுளின் விருப்பத்திற்கு மறுப்பேதும் சொல்லாமல் அவரின் விருப்பப்படி இந்தத் தொழிலில் மகிழ்ச்சியாக ஈடுபட்டு வருகிறேன். அந்தவகையில் பூமியில் ஒவ்வொரு நபரும் ஒரு நோக்கத்துடன் பிறக்கிறார்கள், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேசமயம் கடவுளின் செய்திகளைப் பெறவும், கடவுள் யார் என்பதைப் புரிந்துகொள்ளவும், எனக்கு எந்த குறிப்பிட்ட மத அமைப்பும் தேவையில்லை. 

எனது இந்த புதிய பணி என்னை கடவுளிடம் மிகவும் நெருக்கமாக்கியுள்ளது. மேலும் வயது வந்தோருக்கான டேட்டிங் தளத்தைத் நான் தொடங்கிய பிறகு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலினத்தவர்களும் என்னை மிகவும் ரசித்தனர். இது எனக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக மாறியது" என கர்ட்னி டில்லியா அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். கடவுளினால் தான் நான் ஆபாச நடிகையாக மாறினேன் என இவர் கூறிய இந்த விடயமானது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisement

Advertisement