• Jul 23 2025

இளையராஜாவுக்கு நேரில் சென்று ... பரிசு கொடுத்து... பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் மூன்றாம் தேதி என்றாலும், அந்த நாளில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடப்படுவதால், இசைஞானி தன்னுடைய பிறந்தநாளையே அவருக்காக மாற்றிக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2-ஆம்தேதி கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் இன்று இளையராஜா தன்னுடைய 80வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். இதை முன்னிட்டு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு சமூக வலைதளம் மூலமாகவும், நேரில் சந்தித்தும்  தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின், கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள இளையராஜாவின் அலுவலகத்திற்கு நேரில் சென்று, அவருக்கு பொன்னாடை போர்த்தி, புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 



Advertisement

Advertisement