• Jul 25 2025

அதிரடித் திருப்பத்துடன் 'எதிர்நீச்சல்' சீரியல்... ரசிகர்களுக்கு வெளியான குட் நியூஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றதது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


அந்தவகையில் இந்த சீரியலில் நடிகைகள் மதுமிதா, கனிகா, தேவதர்ஷினி, ஹரிப்பிரியா, சத்ய பிரியா, இயக்குநர் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் இந்த சீரியல்  அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


இந்நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகி இருக்கின்றது. அது என்னவெனில் இந்த சீரியலானது இனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒளிபரப்பாக இருக்கிறதாம். இந்த விடயமானது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement