• Jul 25 2025

பாக்கியாவைப் பற்றி ராதிகாவிடம் புலம்பும் கோபி- காலேஜில் இனியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபி பாக்கியாவை நினைத்து ராதிகாவிடம் புலம்பிக் கொண்டிருக்கின்றார். அத்தோடு நான் பழி வாங்கனும் என்று நினைச்சதே இல்லை, ஆனால் அந்த இடியட்டை சும்மா விட மாட்டேன். அவ எதுக்கு என்னை வில்லன் மாதிரி காட்டனும். மொத்தக் குடும்பத்திடமிருந்தும் கண்டிப்பாக அவளை பிரித்தே காட்டுவேன் என்று ராதிகாவிடம் கூறுகின்றார்.


மறுபுறம் எல்லோரும் இருந்து பேசிட்டு இருக்கும் போது ஜெனிக்கு ஒன்பதாவது மாதம் வருவதால் வளைகாப்பு பண்ண வேண்டும் என்று சொல்கின்றனர். செழியன் வளைகாப்பை சிம்பிளாக வீட்டிலையே பண்ணிடலாம். குழந்தை பிறந்ததும் பெயர் வைக்கிற பங்சனை மட்டும் கிராண்டாக பண்ணிடலாம் என்று சொல்லி எல்லோருட் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பின்னர் பக்கியா வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு இங்கிலீஸ் கிளாசிற்கு வருகின்றார். அங்கே பழனிச்சாமி மற்றும் நண்பியுடன் சேர்ந்து காப்பி சாப்பிடுகின்றார்.இதனை காரில் வந்த கோபி தனது நண்பனுடன் நின்று பார்ப்பதோடு பழனிச்சாமியும் பாக்கியாவும் சிரித்து சிரித்து பேசுவதைப் பார்த்து நக்கலடிக்கின்றார்.


இதனைத் தொடர்ந்து காலேஜிற்கு வரும் பாக்கியா இனியாவையும் அவரது நண்பர்களையும் பார்த்து பேசுகின்றார். அத்தோடு எல்லோருக்கும் சேர்த்து தான் ஸ்னாக் கொண்டு வந்ததாக கொடுக்கின்றார். அப்போது இனியாவின் நண்பர்கள் இனியாவுக்கு இவ்வளவு நல்ல அம்மா இருக்கிறாங்களா என்று பாராட்டுகின்றனர் அப்போது இனியா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement