• Sep 13 2025

பழனிச்சாமியுடன் ஒன்றுசேர்ந்த கோபி- அப்போ பாக்கியாவின் நிலமை அவ்வளவு தானா?- வெளியாகிய போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஸ்டார் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் கவர்ந்த சீரியலாக இருப்பது பாக்கியலட்சுமி. சமீபத்திய எபிசோட்டில் இனியா பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று பெருமை சேர்த்ததை குடும்பத்தினர் பலர் பாராட்டினார்கள்.

அடுத்து இனியா என்ன படிக்க வேண்டும் என்று யோசித்து வந்த நிலையில் கோபி இந்த படிப்பை தான் படிக்க வேண்டும் என்று கண்டீசன் போட்டிருக்கிறார்.என்ன செய்வது என்று இனியா குழப்பத்தில் இருந்தார். இருப்பினும் தன்னுடைய விருப்பத்திற்கு இணங்க விஸ்கோம் படிக்கவே முடிவு செய்த விட்டார்.


இதனால் பாக்கியாவும் இனியாவை கொண்டு போய் பீஸ் கட்டி காலேஜில் சேர்த்து விட்டார். அத்தோடு காலேஜில் பாக்கியா இங்கிலீஸ் பேசுவதைப் பார்த்து கோபி அதிர்ச்டைந்துள்ளார். இதனால் கோபியின் நிலமை இப்படி மோசமாக போய்க் கொண்டிருக்கின்றதே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


இப்படியான நிலையில் கோபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியலட்சமி சீரியலில் பழனிச்சாமி என்னும் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் ரஞ்சித்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். அத்தோடு அதில் பாண்டவர் பூமி திரைப்படத்தை மூன்று முறை ரசித்துப் பார்த்தேன். அவருடன் இணைந்து போட்டோ எடுப்பதில் சந்தோஷம் எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement