• Jul 25 2025

பாக்கியாவை முகத்துக்கு நேராக கிண்டலடித்த கோபி- கடுப்பாகி கத்திய ராதிகா- ஐடியா கொடுத்த பழனிச்சாமி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியாவிடம் கல்யாண வீட்டுக்காரர்கள் வந்து மலேசியாவில் இருந்து இருபது பேர் வருவாங்க அவங்களுக்கு மலேசியன் பூட் செய்து கொடுக்கணும் என்று கூறுகின்றார்கள். இதனால் பாக்கியா யோசிக்க செல்வி அக்கா இதெல்லாம் பண்ணிடுவாங்க யோசிக்காதீங்க என்று சொல்கின்றார். தொடரந்து இது குறித்து பழனிச்சாமியிடம் பாக்கியா பேசப் போகின்றார்.


பழனிச்சாமியும் பயப்பிடாதீங்க யூடியூப்பில் அடித்துப் பார்க்க வேண்டியது தானே அதில பார்த்து செய்து பழகுங்க என்று சொல்கின்றார்.இதனால் பாக்கியாவும் மன நிம்மதி அடைந்ததோடு இரவிரவாக அந்த சாப்பாடு எல்லாவற்றையும் செயது பழகின்றார். பின்னர் விடிந்ததும் திருமணம் நடக்க இருக்கும் சந்தர்ப்பத்தில் பாக்கியாவைக் காணும் கோபி நக்கலடிக்கின்றார்.

அத்தோடு மலேசியா பூட் ஐட்டம் செய்ய பிளான சொன்னதே நான் தான் உன்னால அந்த சாப்பாடு எலலாம் செய்யவே முடியாது என்று சொல்கின்றார். கோபி சொல்வதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். தொடர்ந்து திருமணம் சிறப்பாக நடந்து முடிந்ததோடு சுதாகர் திருமணம் சிறப்பா நடந்து முடிந்ததற்கு இங்கு பரிமாறப்பட்ட சாப்பாடும் முக்கியம் என்று சொல்லி பாக்கியாவைப் பாராட்டுகின்றார்.


பாக்கியாவை மேடைக்கு அழைத்து பாராட்ட கோபியும் ராதிகாவும் கடுப்பாகின்றனர். சமையல் டீம் எல்லோருடனும் நின்று போட்டோ எடுப்பதைப் பாரத்து இருவரும் அங்கிருந்து கிளம்ப கோபி திரும்பிப் பார்க்கும் போது பழனிச்சாமி அருகில் நின்று பாக்கியா போட்டோ எடுப்பதைப் பார்த்து நக்கலடிக்க ராதிகா கடுப்பாகி திட்டுகின்றார். தொடர்ந்து பாக்கியா நன்றி சொல்லி விட்டு கல்யாண வீடடிலிருந்து கிளம்புகின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement