• Jul 25 2025

கோபி கொஞ்சம் பார்த்து இருந்துக்கோங்க- கடுமையான பாங்சிங் பயிற்சியில் ஈடுபடும் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சின்னத்திரையில் பாக்கியலட்சுமி, சீதாராமன் ஆகிய தொடர்களில் மாஸ் காட்டி வருகிறார். குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியல் இவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அர்பன் கேட்டகரியில் தொடர்ந்து முதலிடத்தை இந்தத் தொடர் பிடித்துவரும் நிலையில் முதன்மை கேரக்டரில் நடித்துவரும் ரேஷ்மாவிற்கு மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.

 இந்த சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நாயகன் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்துவருகிறார்  ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சீதாராமன் தொடரிலும் ஹீரோவின் அம்மாவாக, மருமகளை பிடிக்காத மாமியாராக லீட் கேரக்டரில் நடித்து வருகிறார் . 


இதற்கு முன்னதாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் தொடர்ந்து விலங்கு என்ற வெப் தொடரிலும் ரேஷ்மா நடித்து சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார். தற்போது சீரியல்களில் நடிப்பதில் முழு கவனத்தையும் செலுத்திவரும் ரேஷ்மா, சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்

அந்த வகையில் தற்பொழுது பாக்சிங் பழகும் வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கோபி அண்ணே கவனமாக இருந்துக்கோங்க என்று கூறிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement