• Jul 24 2025

ஈஸ்வரியின் பேச்சை மீறி வீட்டை விட்டு கலைத்த கோபி- பாக்கியா எடுக்கப்போகும் முடிவு என்ன?- பரபரப்பான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தாவை வீட்டிற்குள் வர கூடாது என ஈஸ்வரி சொல்கிறார். நீங்க நான்கு பேரும் போய் நடு ரோடில் நில்லுங்கள் என சொல்கிறார். பாக்கியா எழில் எதற்கு ரோடில் நிற்க வேண்டும் நமக்கு ஒரு பொண்ணு இருந்தால் இப்படி தான் செய்வீர்களா என கேட்கிறார்.

 ஈஸ்வரி இப்படி நீ ரொம்ப நாளாக புரட்சி செய்கிறாய். அதனால் தான் குடும்பம் வீணாகி இருக்கிறது என சொல்கிறார்.கோபி விஷயத்திலும் இப்படி தான் செய்தாய் என சொல்ல, உங்க பையன் விஷயத்தில் நான் தப்பு செய்யவில்லை. அதே போல என் பையனும் தப்பு செய்யவில்லை.


பிடித்த பெண்ணை திருமணம் செய்து இருக்கிறான். பணத்திற்காக பிடிக்காத வாழ்க்கையை அவன் ஏற்றுக் கொள்ள தேவையில்லை என சொல்கிறார். இதனால் கடுப்பான ஈஸ்வரி பாக்கியாவிடம் இனிமேல் தன்னுடன் பேச வேண்டாம் என்று எச்சரிக்கிறார். இவ்வாறு எழில் அமிர்தா திருமணம் எதிர்பாராத விதமாக நடந்ததால் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க கோபி தனது வீட்டுக்கு வைத்த கெடு முடிந்து விடுகின்றது. இதனால் ஈஸ்வரி கோபியிடம் சென்று இந்த வீட்டை நீ விற்கக் கூடாது என்று கூறுகின்றார். ஆனால் கோபியோ பாக்கிாவிடம் சென்று நீ வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிய ரசிகர்களும் ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement