• Jul 25 2025

தற்கொலைக்கு முயற்சி செய்யும் கோபி- ராதிகா திருமணத்திற்கு ஓகே சொல்வாரா?- இணையத்தில் வைரலாகும் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி  சீரியல் ஏற்கனவே விறுவிறுப்பின் உச்ச கட்டத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. பாக்கியாவிடம் 40 லட்சம் ரூபாய் பணத்தை கேட்ட கோபி பாக்கியா தருவதாகக் கூறியதும் வீட்டை விட்டு சென்று விட்டார்.

 கோபி பற்றிய எல்லா உண்மையும் தெரிந்த பின்பு ராதிகா அவரை வெறுத்து விட்டார்.. கோபியிடம் பேசுவதையும் நிறுத்து விட்டார். ஆனால் ராதிகாவின் அம்மா, அண்ணன் ராதிகாவை கோபிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கின்றனர்.


பாக்கியாவுக்கும் கோபிக்கும் விவாகரத்து கிடைத்து விட்டது என்று தெரிந்ததும் அவர்கள் ராதிகாவின் மனசை மாற்ற தொடங்கி விட்டார்கள். இப்படி இருக்கையில் கோபி வீட்டை விட்டு வெளியே வந்ததும் ராதிகாவுக்காக தான். இப்படி இருக்கையில் அவர் ராதிகாவை சந்தித்து பேசி திருமணம் பற்றி வற்புறுத்துவார் என நம்பப்படுகின்றது.

ராதிகா அதற்கு சம்மதிக்காத போது தற்கொலை வரை சென்று அவரை ஏமாற்றி மனசை மாற்ற முயற்சி செய்வார் எனவும் இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன. அதுமட்டுமில்லை பாக்கியாவை ஜெயிக்க விடாமல் செய்ய கோபி பல சதிகளை இனி செய்வார் எனவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement