• Jul 24 2025

பரிதாப நிலைக்குச் சென்ற கோபி... ஐயோ பாவம்.. இப்படி பல்பு வாங்கிட்டாரே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகின்றனர்.


அந்தவகையில் இந்த சீரியலில் மிகப்பெரிய தூணாக விளங்கி வருபவர் கோபி தான். இதற்கு முன்னர் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயரையும் புகழையும் சேர்த்தது 'பாக்கியலட்சுமி' சீரியலில் இவர் நடித்த கோபி கதாபாத்திரம் தான்.


இவர் சீரியல்களில் மட்டுமன்றி சமூக வலைதளப் பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அதில் ஏதாவது வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் தத்துவக் கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் தான் இருப்பார். அந்தவகையில் தற்போதும் தலையில் கை வைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது அப்புகைப்படத்திற்கு கீழே "இனிமே கோபிக்கு புள் பல்பு தான், எஸ்கேப் ஆக முடியாது, பாவம், பல்பு வாங்கிறதற்கு இவரைத் தவிர வேற யாரும் இல்லை, கொடுக்கிறதற்கு லைன்ல நிக்கிறாங்க, மனசை திடப்படுத்திக்கோ கோபி" என ரொம்பவும் பரிதாபமாக பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement